உனக்காக நான் நிறையவே இழந்திருக்கிறேன்....
ஆசை ஆசையாய் !....
இணைவதும் பிரிவதும் இயல்பே...!
ஆசையில் ஓர் காதல் மடல் !!!
காதலெனும் ஓர் மடல்
நான் வரைந்தேன் இன்று
என் விழிகளை தூரிகையாக்கி !!
வார்த்தைகள் வரவில்லை உன்னை வர்ணிக்க
காகிதமே வெறுமையானது இன்று !!
நீ உணர்வாயோ ???
ஆயிரம் வார்த்தைகள்
வெற்றுமடலில் நான் வரைந்த
நம் காதல் ஓவியத்தில் !!!
தவிக்கும் இதயம்..!

நான் அழுகிறேன் இன்று
உன் நினைவுகளினால்..
இதனால் உறக்கம் எனக்கு
பிரிவு கடிதம் அனுப்பிஇருந்தது..
எந்நேரம் அவனின் நினைவுகள்
எனக்கு அழைப்பிதழ்கொடுத்தது..
உனக்காக பிறந்தவள் நான்
என்று நினைக்கும் போதுஇனித்தது..!
சோதனையும் வேதனையும்
சேர்ந்ததா காதல்..?
என் கேள்விக்கு அவனின்
பதில் கண்ணீர்..
ஆனால் நீ என்னை உயிருக்கு
உயிரை நேசிக்கிறாய் என்று
நான் அறிவேன்..!
உன் கண்களில் இருந்து பாய்ந்த
உன் பாசக் கதிர்களினால் பாதிக்கபட்டது
என் இதயமாட..புரிந்துக் கொள்..!
தவிக்கும் என் இதயத்தை..!
தொடரும் நினைவுகளுடன்,
அனுஷ்மன்



No comments:
Post a Comment