புலர்காலை புதுக்காற்றோடு பண்பலையில்
ஸ்ரேயா கோசலின் இன்குரல்
மாங்கனி சாராக காதில்
இறங்கிக் கொண்டிருந்தது
வசந்தத்தை தானே உணர்ந்து மலரும்
கைவிரல்களென கொத்தாக பூத்திருந்த
மனமயக்கும் குளிர்சிவப்புப் பூக்கள்
விழித்திரையில் அசைந்தாடி நடனமிட்டன
மின்சார கம்பிகளின்
இசைக்குறியீடுகளென அமர்ந்திருக்கும்
காக்கைகள்
எங்கோ இசைக்கப்படும்
பியானோவுக்கு பொத்தானாகி இசைப்பரப்பின
நெடுஞ்சாலையில் வட்டச்சுற்றில்
நிறைமாத கர்பிணியின் வயிறென
சரிந்து அமர்ந்திருந்த
நடுக்கல்லை நனைத்துக் கொண்டிருந்தது
சுழன்றாடும் சுகந்த நீரூற்று
வார இறுதி இனிதே தொடங்கியது
கூடவே
நேற்றடித்த புயலால்
முறிந்து போன மரக்கிளை
எப்போது எடுத்து ஏறிப்படுவோமோ
என்ற பயத்துடன்
அடுத்த கிளை மேல் சாய்ந்து
ஊசலாடிக் கொண்டிருந்தது
ஸ்ரேயா கோசலின் இன்குரல்
மாங்கனி சாராக காதில்
இறங்கிக் கொண்டிருந்தது
வசந்தத்தை தானே உணர்ந்து மலரும்
கைவிரல்களென கொத்தாக பூத்திருந்த
மனமயக்கும் குளிர்சிவப்புப் பூக்கள்
விழித்திரையில் அசைந்தாடி நடனமிட்டன
மின்சார கம்பிகளின்
இசைக்குறியீடுகளென அமர்ந்திருக்கும்
காக்கைகள்
எங்கோ இசைக்கப்படும்
பியானோவுக்கு பொத்தானாகி இசைப்பரப்பின
நெடுஞ்சாலையில் வட்டச்சுற்றில்
நிறைமாத கர்பிணியின் வயிறென
சரிந்து அமர்ந்திருந்த
நடுக்கல்லை நனைத்துக் கொண்டிருந்தது
சுழன்றாடும் சுகந்த நீரூற்று
வார இறுதி இனிதே தொடங்கியது
கூடவே
நேற்றடித்த புயலால்
முறிந்து போன மரக்கிளை
எப்போது எடுத்து ஏறிப்படுவோமோ
என்ற பயத்துடன்
அடுத்த கிளை மேல் சாய்ந்து
ஊசலாடிக் கொண்டிருந்தது
No comments:
Post a Comment