Tuesday, August 30, 2011

காத்திருக்கேன் .............



அண்ணா......... 
மூவேழு ஆண்டுகளில் 
முற்றிலும் மாறியதடா.... 
முற்றத்தில் நீ வைத்த 
வேப்பங்கன்று -பேரு 
விருட்சமாகி விட்டதடா 
அக்கம் பக்கமெல்லாம் 
அவரவர் வாழ்க்கையில் 
எத்தனையோ மாற்றங்கள் 
ஆனால் 
அம்மாவும் அப்பாவும் 
கோவிலே கதிஎன்றாகினர் 
உன் விடுதலை வேண்டியே,..... 
நான் மட்டும் இன்று 
உன் வருகைக்காய் 
காத்திருக்கேன் 
வாசல் படலை பார்த்தே.............. 

தொடரும் நினைவுகளுடன்,
அனுஷ்மன்

No comments:

Post a Comment