இரு இமை உதடுகள்...!
இரு இமை உதடுகள் அசைவில்
என் கரு விழி நாவில்
சுழலும் ஊமை மொழிகளில்
பிறந்த சோக கீதமே ...!
உன்னை நீர் விழி
குமிழியில் நனையும் தாகங்கள்
காதல் ரசமாய் மாறியதால்
ஊண் விழி உப்பில் உதிரம் மருகி
தேன்துளியாய் பாயிந்ததால் ....!
யாழ் விழியால் தூங்குகிறேன்
கனவு கோட்டையில் பூக்கும்
நினைவு கவிதையின் வெற்றியில் ....!
No comments:
Post a Comment