Tuesday, August 30, 2011

காத்திருக்கும் என் காதல் ....

எம் 

உணர்வுகள் ஒன்றாகி 
திருநாள் கொண்டாட எண்ணியே 
உறவாக வைத்தேனே உனையே... 
அஞ்சல் இடாத காகிதமாய் 
குப்பைத்தொட்டிக்குள் வீசி 
விட்டெறிந்து சென்றாய் எனையே... 
கண்ணுக்கு இமையாக இருப்பேன் 
இருப்பேன் என்றாயே -அன்று 
ஆனால் இன்று 
கண் குத்தி சென்றாயே. 
பூவே................. 
ஏமாந்தது நான் அல்ல 
உன் வாழ்வே 
புரிந்து கொள்ளும் நாள் வரும் 
அந்நாளும் வருந்தாதே -ஏனெனில் 
அன்றும் உனக்காய் நானிருப்பேன்...

No comments:

Post a Comment